வியாழன், 23 ஜூலை, 2015




மநு"நீதியையும்" போலி தமிழ்தேசிய பின்னனியையும்
தோலுரித்து காட்டியுள்ளார் தோழர் Sembian Parithi​
அனைவரும் பகிருங்கள்.

ஜெயா விடுதலை - மனு நீதி மீண்டும் நிலை நாட்டப்பட்டது
கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற மேல் முறையீட்டு வழக்கில் குற்றவாளி பார்ப்பன பாசிச ஜெயலலிதா என்கிற கோமளவல்லி ஊழல் குற்ற வழக்கிலிருந்து தான் கொள்ளையிட்ட சொத்துக்களுடன் இன்று 11-05-2015-ல் முழுவதுமாக விடுவிக்கப் பட்டிருக்கிறார். முடக்கப்பட்ட ஊழல் சொத்துக்களையும் உடனே விடுவிக்க வேண்டுமென்று கர்நாடக நீதி(?)பதி குமாரசாமி தன் தீர்ப்பில்(?) தெரிவித்திருக்கிறார். சரியாக காலை 10.59 மணிக்கு நீதிமன்றத்தின் அறை எண் 14-க்குள் நுழைந்த நீதிபதி குமாரசாமி எடுத்த எடுப்பிலேயே, "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்" என்றார்.
தொடர்ந்து தீர்ப்பை வாசித்த அவர், "சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட சாட்சியங்கள் ஏற்புடையதாக உள்ளது. எனவே, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்" என்றார். 18.5 ஆண்டுகளாக நடைபெற்ற ஊழல் வழக்கின் மேல் முறையீட்டு மனு மீது வெறும் 41 நாட்கள் விசாரணை; இரண்டு நிமிடத்தில் தீர்ப்பு.

தீர்ப்பை வழிநடத்திய பார்ப்பன பாசிச பா.ஜ.க. தீர்ப்பை விமர்சிப்பவர்கள் மீது அறச்சீற்றம் கொண்டெழுந்து கடித்துக் குதறுகிறது. நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்புக்குப் பின் கடந்த சில நாட்களாக ஜெயாவும் பா.ஜ.க.வும் எதிரிகளைப் போன்று நடத்தி வந்த தோல்வியடைந்த நாடகம் இன்றுடன் முடிவுக்கு வந்துவிட்டது.
முன்னதாக இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தன் தீர்ப்பில் நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

தீர்ப்பைக் கண்டு கொதித்துப் போன 'உச்சிக் குடுமி மன்றம்' உடனே பிணை வழங்கி ‘மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்' என கால வரையறை நிர்ணயித்தது. இந்த வழக்கை ஜெயலலிதா தன் வாழ்நாள் முழுவதும் இழுத்தடித்துக் கொண்டேயிருந்தாலோ தண்டனை வழங்கப்படாமல் இருந்திருந்தாலோ வழக்கை முடிக்க 'உச்சிக் குடுமி மன்றம்' கால வரையறையை நிர்ணயித்திருக்காது. தண்டனை வந்ததாலேயே வழக்கை தான் விரும்பியபடி முடிக்க எண்ணியது.

இந்த ஊழல் குற்றத்தை ஊழல் வழக்கு என்று நுணுக்கமாகத் திசை திருப்பி, இது ஏதோ ஜெயாவின் பகைவர்கள் (தி.மு.க.) அவரை ஒழித்துக்கட்ட அவர் மீது திட்டமிட்டு புகார் கூறியுள்ளதாகவும் அதை 'உரிய' முறையில் விசாரித்து அதில் 'உண்மை(?)' உள்ளதா என்று விசாரித்துத் தீர்ப்புக் கூறுவதைப் போன்று நீதிமன்றங்கள் ('உச்சிக் குடுமி மன்றமும்', கர்நாடக உயர் நீதிமன்றமும்) பாவனை செய்து வந்தன. இப்படித்தான் இந்த ஊழல் குற்றமானது ஊழல் புகாராக மாற்றப்பட்டு பொய்ப் புகாராக இரண்டே நிமிடத்தில் தீர்ப்பெழுதப்பட்டது.

இந்தப் புகாரை(?) 'உச்சிக் குடுமி மன்றம்' தன் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்து ஜெயா பிணை முடிவதற்குள் 'தீர்ப்பை'யே வழங்கிடுமாறு உத்தரவிட்டது. வழக்கின் எல்லா நிலைகளிலும் நட்சத்திர விடுதிப் பணியாளர் தன் விருந்தினரை உபசரிப்பது போல் 'உச்சிக் குடுமி மன்றம்' வழக்கின் கூடவே பயணித்து நன்கு கவனித்துக் கொண்டது. ஏற்கனவே முடிவு செய்யப் பட்டதைத் தீர்ப்பாக அறிவிக்க எதற்கு ஆயிரக்கணக்கான பக்கங்கள், வாதங்கள்? மனுநீதியை வழங்க எதற்கு அதிக நேரம்?

அந்த மனு நீதி இதுதான்:
எந்தப் பாவம் (கொலைக் குற்றமே) செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி பொருளை கொடுத்து ஊரை விட்டுத் துரத்துக (8 : 380).

ஜெயாவின் பார்ப்பன புனிதத்திற்குக் காயமின்றி கொள்ளையடித்த பொருட்களுடன் தமிழகத்தை ஆட்சி செய்ய (மீண்டும் கொள்ளையடிக்க) கர்நாடகச் சிறையிலிருந்து தமிழகத்துக்குத் துரத்துக.
இதற்கு இரண்டு நிமிடங்கள் தேவையில்லை; ஏற்கனவே ஒரு சூத்திரன் சொன்னது தவறென்று சொல்வதற்குத் தான் அவ்வளவு(?!) நேரம்.
அடுத்து, பின்வரும் மனுதர்ம சுலோகங்களே ஜெயாவின் குற்றச் செயலுக்கும் அவருக்கான நீதிக்கான அடிப்படையுமாகும்:

"சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்." - அ.11. சு.13.

"யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைக் தண்டிக்கக் கூடாது." - அ.11. சு.20.

இம் மனுநீதித் தீர்ப்பின் நீட்சியாக 2G வழக்கு விரைந்து முடிக்கப்படும். அதன் தீர்ப்பு வருமாறு:
பிராமணனுக்குத் தலையை முண்டனம் (மொட்டை அடித்தல்) செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).

பார்ப்பனனுக்கு தலையை மொட்டை அடித்தாலே அது மரண தண்டனைக்கு ஒப்பாகுமாம், ஆனால் பிறருக்கோ பார்ப்பான் செய்த அதே குற்றத்துக்கு மரண தண்டனையே வழங்கப்படும். மேற்கண்ட மனுநீதியே 2G வழக்கின் தீர்ப்பாகும். அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கும் ஊழல் வழக்குகளில் அளிக்கப்பட சிறைத் தண்டனைக்கும் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படாத சிறைத் தண்டனைக்கும் மேற்கண்ட மனுநீதி விதிகளே காரணமாகும்.

இது ஒரு விநோதத் தீர்ப்பென்று ஜனநாயகத்தின் காவலர்கள் புலம்புகிறார்கள். விநோதத்திற்குக் காரணம் குற்றவாளி, அவருக்கு எதிராக வாதாட அவர் சார்பாக ஒருவர், அவருக்கு ஆதரவாக வாதாட அவர் சார்பாக இன்னொருவர், இருவர் பேச்சையும் கேட்டு குற்றவாளிக்கு நீதி வழங்க அவர் சார்பாக மூன்றாமவர் என மூவரையுமே குற்றஞ் சாட்டப்பட்டவரே நியமித்தது தான்! ஆனால் இந்திய நாணயத்தின் இரு பக்கங்களாக ஒருங்கே ஆட்சி செய்யும் பார்ப்பன பாசிசமும் தரகு முதலாளித்துவமும் ஊழல் என்கிற ஒரே வேரில் இருந்து தான் வெளிக் கிளம்புகின்றன.

இந்தியா முழுவதும் 3.56 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகளும் உயர் நீதிமன்றங்களில் மட்டும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளும் தேங்கியிருக்கின்றன. ஒடிசா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ். சௌகான் "இந்திய நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரித்து முடிக்க இன்னும் 300 ஆண்டுகள் தேவைப்படும்" என்று கூறிய நிலையில் எதிர்தரப்பு வழக்குரைஞர் நியமனமே செல்லாததாக அறிவிக்கப்பட்டும் வழக்கு நடத்தும் அரசு சார்பாக வழக்குரைஞர் கூட இல்லாமலும் 41 நாட்களில் வெறும் இரண்டே நிமிடங்களில் தீர்ப்பு கூறப்பட்டது இந்திய அரசமைப்பு மற்றும் நீதித்துறைகளின் யோக்கியதையை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. நேற்று வரை நடிகர் சல்மான் கானின் வழக்கில் சாம பேத தண்டங்களை சூறாவளி போல் சுழற்றிய விபச்சார ஊடகங்கள் வெறும் சில மணி நேர இடைவெளியில் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அருவெறுப்பாக நேர் எதிராகப் பேசுகின்றன.

'தி இந்து' தீர்ப்பு வந்தவுடனேயே பாசிச ஜெயாவை போராளியாக்கும் வேலையில் ஈனத்தனமாக இறங்கி விட்டது. தன் இணைய இதழில் தன்னுடைய நச்சுக் கருத்தை வாசகனின் மண்டைக்குள் ஏற்ற கருத்துக் கணிப்பு என்கிற பெயரில் கேள்வி பதிலை ஜெயலலிதாவை புனிதப்படுத்தும் நோக்கில் குவியப்படுத்திப் போட்டுள்ளது. அதை ஊன்றி கவனியுங்கள்:
சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூலம் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி குறித்து எழும் கருத்துகளில் முதன்மை வகிப்பது...

• விடாப்பிடி சட்டப் போராட்டத்தின் வெற்றி
• பொய்வழக்குக்குக் கிடைத்த தோல்வி
• தொண்டர்களின் விசுவாசமான பிரார்த்தனை
கருத்துக் கணிப்புகள் என்பவை இப்படித்தான் பொதுக் கருத்துகளுக்கு எதிராக மாயக் கருத்துகளாக கருத்துத் திணிப்புகளாக அறிவியலுக்கு முரணாக உள்ளன. இதைத் தான், 'உலகில் எதை வேண்டுமானாலும் நிரூபிப்பதற்கு "வாதங்களை"த் தேடித் பிடிக்க முடியும்' என்று ஹெகல் மிகப் பொருத்தமாகக் கூறினார்.
ஜெயாவின் விடுதலை தமிழக பார்ப்பன சாம்ராச்சியத்தின் முன் நிபந்தனை
ஜெயாவை ஒழித்துக் காட்டினால் தான் தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியும் என்பதால் அவருக்கு அத்தகையதொரு தண்டனையை பா.ஜ.க. வாங்கிக் கொடுத்தது என்று நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை சுட்டிக் காட்டி தமிழினத்தின் புதிய காவலர்களாகத் தங்களை நியமித்துக் கொண்டவர்கள், தமிழின வியாதிகள், ஒரு கோட்பாட்டை முன்வைத்தார்கள். ஆனால் குமாரசாமியின் தீர்ப்பு(?!) வந்த போது அந்தச் சதியை முறியடித்து அவர் வெற்றி வாகை சூடியதாக அக்கோட்பாட்டில் ஒரு பின்னிணைப்பைச் சேர்த்துக் கொண்டுள்ளனர். எப்படியாகிலும் ஜெயலலிதாவுக்கு சேவை செய்து உயிர் விட வேண்டுமென்பதே அவர்களின் தமிழின மீட்சிக்கான இலட்சியம். இத்தகைய இணைப்புகள் இன்னும் நீளும்.
சரி, இவ்வகைப் பிரச்சாரத்தின் உள்நோக்கம் என்ன? அதன் பின்னணி என்ன?

முதலாவதாக ஜெயாவும் ஆர்.எஸ்.எஸ்.சும் வெவ்வேறு அல்ல; ஜெயா ஆர்.எஸ்.எஸ்.சின் தமிழக முகவர். உலகமயமாக்கல் மிகத் தீவிரமடைந்து வரும் அண்மைய ஆண்டுகளில், ஏகாதிபத்தியங்கள் முன்னெப்போதும் கண்டிராத வகையில் உலகின் மீதமிருக்கும் இயற்கை வளங்களை வெறி கொண்டு சுரண்டிவரும் நிலையில் அவற்றின் இந்தியத் தரகர்களான முதலாளிகள் அந்த வெறிக்கேற்ற ஒத்துழைப்பை அரசிடம் எதிபார்க்கின்றனர். பார்ப்பன, பனியா, மார்வாரி போன்ற மேல்சாதி வணிகக் கும்பல்களின் கூடாரமான ஆர்.எஸ்.எஸ். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் துடித்தது; அதன் மூலம் தன் அகண்ட பாரதக் கனவை நிறைவேற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பு கிட்டும் என்று நாக்கில் எச்சில் ஊற அலைந்தது. ஆர்.எஸ்.எஸ்.சின் அகண்ட பாரதம் என்பது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏழை நாடுகளில் தனக்கும் தன் வணிக சாதிகளுக்கும் பொருளாதார ஆதிக்கமும் பார்ப்பனியத்தின் பண்பாட்டு ஆதிக்கமும் பெறுவதாகும். இந்தப் பின்னணியிலேயே மக்களை முன்னிறுத்தி இந்தியத் தரகு முதலாளிகள் தன்னுடைய விசுவாச காங்கிரசு அரசைத் தூக்கியெறிந்தனர்.

பெரியார் என்கிற மாபெரும் ஆளுமையின் காரணமாக தமிழகத்தில் காலூன்றவே முடியாதிருந்த ஆர்.எஸ்.எஸ்., பாசிசக் கோமாளி எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்ததும் தன் அடித்தளத்தை நிறுவியது. பின் எம்.ஜி.ஆர்-ன் சாவுக்குப் பின் தமிழக பார்ப்பன கும்பல் ஆர்.எஸ்.எஸ்.சின் உதவியுடன் ஜெயாவைக் கொண்டு வந்தது. இந்தப் பார்ப்பன கும்பலும் ஆர்.எஸ்.எஸ்.சும் தான் ஜெயாவின் ஆதாரம்; தத்துவ அடித்தளம். எல்லாத் தடைகளையும் உடைத்து ஆர்.எஸ்.எஸ்-சின் கூடாரமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்பதே இந்தக் கூட்டணிப் பணியின் நோக்கம்.
இதற்காக ஜெயாவை அனைவருக்கும் பொதுவானவராக மதச்சார்பற்றவராக சாதிகளைக் கடந்தவராக பெண்களின் காவலராக ஏழைகளின் பாதுகாவலராக போராளியாக முன்னிறுத்த வேண்டும்; வலுவான அரசியல் ஆற்றலாக இருக்கும் கருணாநிதியை அரசியல் அரங்கில் இருந்தே அகற்ற வேண்டும். அதற்கு வரப்பிரசாதமாக அமைந்த 2G வழக்கை பயன்படுத்தி கருணாநிதி மற்றும் தி.மு.க.வின் குரல்வளையை நெறித்து அதன் இறுதி மூச்சை நிறுத்தி விட வேண்டும். இதற்கு முக்கியமான காரணம் பார்ப்பனியத்தின் நேர் எதிராக இருக்கும் திராவிட அரசியலின் மிச்ச சொச்சமாக கருணாநிதி இருப்பது தான். ஆரிய அரசியலுக்கு திராவிட அரசியலை ஒழித்துக் கட்டுவதே முன் நிபந்தனை.

திராவிடக் கருத்தியலுக்கு எதிராக பார்ப்பன மயமாக்கப்பட்ட தமிழினவாதத்தை ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பல் திட்டமிட்டு உருவாக்கி வருகிறது. இதற்கான முகவர்களாக பொய்க்கோ (வைகோ), அடிமைச் சீமான், ஈனமாறன் (பழ.நெடுமாறன்), பிணியருவி சனியன் (தமிழருவி மணியன்), தறுதலைப் பாண்டியன் (தா.பாண்டியன்) போன்றோரை - இதில் விடுபட்டோர் மன்னிக்கவும் - தம் பார்ப்பன மடங்களில் பயிற்சி கொடுத்து களத்தில் இறக்கிவிட்டுள்ளது. இதில் அனைவருக்கும் வெவ்வேறு பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பார்ப்பன அடிமைச் சீமான் மட்டும் சற்று பேராசையாக தானே முதல்வராகி விட வேண்டும் என்று தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தின் கனத்தின் ஊடாக நப்பாசையுடன் அலைகிறார்; அவருடைய பாத்திரத்தின் எல்லை எதுவென்று அவருடைய முதலாளிப் பண்டாரங்களால் தக்க நேரத்தில் அறிவு புகட்டப்பட்டு நறுக்கி வைக்கப்படுவார்.

ஜெயலலிதாவின் போராளி பாத்திரத்துக்குத் தோதாக ஈழப்போர் உச்சத்துக்கு வந்தது. பயிற்சியளிக்கப்பட்ட தமிழினக் கும்பல் ஜெயாவுக்கு ஈழத்தாய் வேடமிட்டு தமிழுலக மேடைக்கு அழைத்து வந்தது. அத்தமிழினக் கும்பல் துணை நடிகர்களாக வேடமிட்டன. ஆனால் ஜெயாவோ ஈழத்தாய் வேடத்தில் பொருந்த முடியாமல் திணறினார்; எனவே துணை நடிகர்கள் மிகக் கடுமையாக நடித்து ஜெயாவின் பாத்திரப் பொருத்தமின்மையை கச்சிதமாக மறைக்க முயன்றனர். இந்தப் பார்ப்பனக் கும்பலோ ஈழப்போரை இந்த பொம்மைகளை வைத்து சரியாகப் பயன்படுத்தி ஓர் இனத்தின் உயிர்ப் போராட்டத்தை அதன் வலியை அது உண்டாக்கிய தாக்கத்தை அதன் உணர்வை ஈவிரக்கமின்றி கபளீகரம் செய்தது. இவ்வாறு பீறிட்டெழுந்து இந்திய தேசியத்திற்கு சேதத்தை உண்டாக்கும் படி கருவாகி வந்து கொண்டிருந்த, தேசிய இன உணர்வை தட்டி எழுப்பக் கூடிய பண்புக் கூறுகளைக் கொண்டிருந்த தமிழுணர்வானது பார்ப்பன மயமாக்கப்பட்ட இந்து (இந்திய) தேசியத் தமிழுணர்வாய் புனிதப்படுத்தப்பட்டு ஜோதியில் கலக்க வைக்கப்பட்டது.

பார்ப்பன மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் பிற தளங்களிலும் தத்துவத் தளத்திலும் திராவிடத்தை கருவறுக்கும் திட்டங்களில் இறங்கின. ஆரிய மாயைக்கு எதிராக திராவிட மாயை; திராவிடத்தின் மதச்சார்பின்மையைத் தாக்கி அதன் ஆதரவு ஆற்றல்களான மதச் சிறுபான்மையினரை, நிறுவனமயமாக்கி பிரித்து ஜெயாவின் காலடியில் போடுவது; சிறு தெய்வங்கள், நாட்டுப்புற தெய்வங்கள் மற்றும் தமிழ் கடவுள்களை ஆரிய மயமாக்குவது; தமிழ்ப் பண்பாட்டை பார்ப்பன மயமாக்குவது; பெரியாரை மத நம்பிக்கைக்கு எதிரானவராகக் குறுக்கி அனைத்து மத பக்தர்களுக்கும் எதிரியாக நிறுத்துவது; இறுதியாக திராவிடத்தை வேரோடு பிடுங்கி எறிய தமிழ் இனவாதத்தை முன்னிறுத்துவது; திராவிடத் தத்துவவியலின் மூல காரணமாகக் கருதப்படும் பெரியாரை தமிழின வாதத்துக் கெதிராக நிறுத்தி அதன் மூலம் தமிழர்களுக்கு எதிரியாக மாற்றுவது; மொத்தமாக பெரியாரை ஒழித்துக் கட்டுவது; இந்த வகை அடித்தளத்திலிருந்து கட்டப்படும் தமிழினவாதம் பார்ப்பனியத்தின் தமிழ்ப் பதிப்பாகவே இருக்கும் என்பதால் தமிழகத்தில் பார்ப்பன சாம்ராச்சியம் என்பது ஒரு எளிய இனிய பயணமாகவே இருக்கும் என்று இந்தப் பார்ப்பன, ஆர்.எஸ்.எஸ். கும்பல் கணக்கிட்டு திட்டமிட்டு வேலை செய்கிறது.

அக்கும்பல் ஒரு நீடித்த திட்டமிட்ட சீரான வளர்ச்சியை நோக்கி முன்னேறுகிறது. இத்திட்டக் குழுவின் உறுப்பினரான ஜெயாவின் பணி இதுவரை மிகச் சிறப்பாக இருந்தாலும் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது; அவர் ஆட்சியில் இல்லாவிட்டால் இழப்பு அவர்களுக்குத் தான். எனவே அவர் சிறையில் இருப்பதை விட ஆட்சியில் இருப்பது தான் தேவை. ஒரு வேளை அவர்கள் நினைத்த வேகத்தில் ஜெயாவின் உதவியோடு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்து விட்டால் அ.தி.மு.க.வில் ஜெயாவுக்குப் பின் யார் என்ற கேள்வி எழப்போவதில்லை.

உலகமய, தாராளமய மற்றும் தனியார்மயக் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதில் மோடிக்கு சற்றும் சளைத்தவரல்ல ஜெயா. இருவருமே பார்ப்பனிய பாசிஸ்டுகள். இந்த இரண்டு கொள்கைகளையும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த ஜெயா விடுதலை அவசியமாகிறது. இதில் பணம் கொடுத்து மட்டும் தீர்ப்பு விலைக்கு வாங்கப்பட்டதாக குறுக்கி பார்க்கக் கூடாது. அந்தப் பார்வை பாசிஸ்டுகளின் செயல் திட்டங்களை புரிந்து கொள்ள முடியாமல் செய்வதோடு அவர்களுக்கெதிரான போராட்டங்களின் திசைவழி தெரியாமல் குருட்டுத்தனமாக இலக்கின்றி அலைய நேரிடும்; அது பார்ப்பன இந்து மதப் பாசிஸ்டுகள் பலம் பெறவே வழிவகுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக