திராவிடமா, தமிழ்த் தேசியமா? ஓர் அரிய செய்தி!
16.02.2015 அன்று நடைபெற்ற விவாதத்தில் பல செய்திகள் பரிமாறப் பட்டுள்ளன. தவறான செய்திகள் மக்களைச் சென்றடைந்து விடக் கூடாது என்னும் நோக்கில் கீழ்க்காணும் விளக்கம் தரப்படுகிறது.
தோழர் மணியரசன் தன் உரையில், "அயோத்திதாசரிடம் பின்னாளில் மாற்றம் வந்தது. சென்சஸ் கணக்கு எடுப்பின் போது, 'எங்களைச் சாதியற்ற தமிழர் என்று குறியுங்கள்' என்று மனுப் போட்டார். திராவிடர்ன்னு சொல்லலை" என்று குறிப்பிட்டுள்ளார்.
நண்பர் வாலாசா வல்லவன் அந்தச் செய்தியில் பிழை உள்ளது என்று உறுதிபடக் கூறினார். உடனே, ஞான அல்லோசியஸ் தொகுத்துள்ள அயோத்திதாசர் சிந்தனைகள் இரண்டு தொகுதிகளையும் மீண்டும் எடுத்துப் படித்தபோது,வல்லவன் சொல்லியதே சரி என்பது உறுதியானது. இறுதிவரையில் அவர் திராவிடர் என்னும் சொல்லையே மிகப் பலவிடங்களில் பயன்படுத்தியுள்ளார். மணியரசன் குறிப்பிடும் மனு, முதல் தொகுதியில் 307-08 ஆம் பக்கங்களில் இடம் பெற்றுள்ளது.அவ்வரிகள் அப்படியே கீழே தரப்படுகின்றன:
"இத்தேசப் பூர்வ சரித்திரங்களைக் கொண்டும், இத்தேசப் பூர்வ சரித்திரங்களின் ஆதாரங்களைக் கொண்டும், பூர்வ குடிகளை சாதி பேதமுள்ள இந்துக்களினின்று பிரித்து, சாதி பேதமற்ற திராவிடர்கள் என்றே எழுதும்படியான உத்திரவளிக்க வேண்டுகிறோம்."
இம்மனு 1910 டிசம்பர் 14 அன்று எழுதபட்டுள்ளது. அயோத்திதாசரின் இறுதி ஆண்டுகளான 1913,14 ஆகியவற்றிலும் பல இடங்களில் அவர் திராவிடர் என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளார். -
-சுப.வீரபாண்டியன்-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக