வியாழன், 23 ஜூலை, 2015




யார் கருப்புக் காக்கை...

பச்சைத் தமிழர் யார்....?
பச்சைப் பார்ப்பனர் யார்...?

ஆச்சாரியார் இரண்டு முறை முதல் அமைச்சராக இருந்தபோது ஓய்வு பெற வேண்டிய பார்ப்பனர்களை எல்லாம் தேடித் தேடிப் பார்த்து, பதவி நீட்டிப்ப செய்தார். ஓய்வு பெற்று "கிருஷ்ணா, ராமா" என்று பஜனையை பாடிக் கொண்டு சாய்வு நாற்காலியில்  முழங்காலை அமுக்கிக் கொண்டிருந்த பார்ப்பனர்களின் முகவரிகளைத் தேடிச் சென்று இழுத்து வந்து அதிகார நாற்காலியில் அமர வைத்து அக்கிரகாரத்துக்கு "ஜே" போட்டார்.

ஆம்,ஆச்சாரியார் பச்சைப் பார்ப்பனராகவே பூணூல் தர்பாராகவே ஆட்சியை நடத்தி வந்தார்.

காமராஜர் ஆட்சிக்கு வந்ததும் அதனைத் தலைகீழாக மாற்றினார்.

தமிழர்களை உரிய இடத்தில் அமர்த்தினார். நெ.து.சுந்தரவடிவேலு போன்றோவர்களைக் கொண்டு வந்து கல்வித் துறையில் தலைமைப் பொறுப்பில் அமர்த்தியவர், ஓர் அப்பாதுரைத் தலைமைப் பொறியாளராக அமரச் செய்தார்.மிஸ் மரைக்காயா என்ற முஸ்லிம் பெண்மணியை மருத்துவத்துறையின் இயக்குநராக அமர்த்தினார்.

அந்த ஆத்திரத்தில்தான் ஆச்சாரியார் காமராஜரைக் கருப்புக் காக்கை என்றார். (காக்கை என்றாலே கருப்புதான்; பிறகு ஏன் கருப்புக் காக்கை என்று கூறியுள்ளார்...? அந்தக் கருப்பு என்பது வேறு ஒன்றும் அல்ல. கருப்புச் சட்டைக்காரர்-பெரியாரின் ஆசாமி என்று அடையாளம் காட்டவே) என்று கூறினார். அந்தக் கருப்புக் காக்கையைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்றும் கொலை வெறியைத் தூண்டினார்.

(கதர்ச்சட்டைக்குள் கருப்புச்சட்டை என்று "கல்கி" கார்ட்டூன் போட்டதும் அர்த்தத்தில்தான் !) காமராஜர் வாய் மூடியாக- மவுன சாமியாராக இருந்தாரா..?

 பதிலுக்குப் பத்தடி கொடுத்தார் . ஆச்சாரியாரின் ஆணவ மண்டையின் கபாலம் நொறுங்கும் வகையில் இடி முழக்கம் செய்தாரே!

"ஒருவனுக்கு நன்றாக கறி சாப்பாடு போட்டு வளர்க்கிறோம். இன்னோருத்தன் மூன்று நாள் பட்டினியில் கிடந்தவனாய் இருக்கிறான். இரண்டு பேரையும் சண்டைக்கு விட்டு, கறி சாப்பாடு சாப்பிட்டவன் ஜெயித்தால் அதற்குத் தகுதி - திறமை என்று பேரா?
 பட்டினிக் கிடப்பவனுக்கும் அத்நெ கறி சாப்பாட்டைப் போடு , அப்புறம் சண்டைக்கு விட்டால் இரண்டு பேர் தகுதி-திறமையும் ஒன்றாகத் தானே இருக்கும்.

பறையன் டாக்டராக வந்து ஊசி போடுகிறான்.அவன் ஊசி போட்டதாலே எந்த எந்த நோயாளி செத்துப்போய் விட்டான்...?

அப்போ பறையனுக்கும் தகுதி வந்துவிட்டதா,இல்லையா..? தகுதி-திறமை என்பது உயந்த ஜாதிக்காரனிடமும்,இந்தப் பரம்பரை உத்தியோக ஆதிக்கக்காரனிடமும் தானா இருக்கிறது..?

இப்படி தகுதி - திறமை என்று கொஞ்ச நாளாகவா நீங்க ஏமாத்துறீன்க? நாலாயிரம், அய்யாயிரம் ஆண்டுகளாகவே ஏமாத்தி வருகிறீர்கள்!

*மந்திரம் தந்திரம் என்று சொல்லி ஏமாற்றி கொஞ்ச நாள் ஆதிக்கம் செலுத்தினீர்கள். இப்போது படிப்பு என்று சொல்லி ஏமாத்துகிறீர்கள். புத்தகம் படித்து விட்டால் தகுதி-திறமை வந்து விடுமா? இல்லை வந்து விட்டதாக அர்த்தமா? உன் திறமையும் எனக்குத் தெரியும். சொல்லிக் கொடுத்தவன் திறமையும் எனக்குத் தெரியும்!*
என்று காமராஜர் கர்ச்சித்தாரே?
(நூல் "தகுதி-திறமை'மோசடி!)

இந்த பச்சைத் தமிழர் காமராஜரை பார்த்துதான் அன்றைக்கு பார்ப்பன துக்ளக்  ஏடுகேலி செய்தது

தமிழரில்
பச்சைத் தமிழர், சிவப்புத் தமிழர், மஞ்சள் தமிழர் உண்டா என்று.

பச்சைத் தமிழர் காமராஜர் பேச்சா தந்தை பெரியாரின் பேச்சா என்று அன்றைக்கே விடுதலையில் தலைப்புக் கொடுத்து செய்தி வெளியிட்டதே இதனால்தான் காமராஜர்
*பச்சைத் தமிழர்* - புரிகிறதா,"துக்ளக்'' வகையாறாக்களே.....?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக