வியாழன், 23 ஜூலை, 2015




வாழ்த்துகள் சகோதரிகளே!!

தோழியர்கள் செல்வி, பிரியாபாபு மற்றும்
 ஓல்கா,எஸ்தர் பாரதி அவர்களுக்கு.

பல இன்னல்களை கடந்து தன்மீது
சுமத்தப்படும் சுமைகளையும் தாங்கி
வெற்றிகொடி நாட்டியுள்ள இந்த சுமுதாய
சிற்பிகளை வாழ்த்தாமல் இருக்க முடியாது.

திருநங்கையாக என்னால் வாழ முடியாத போதிலும்
ஒரு திருநங்கையின் உணர்வுகளை என்னால் உணர முடிந்தது
காவிபயங்கரவாதத்திற்கு எதிராக சரிநிகர் என்ற அமைப்பை தொடங்கி  உணர்வாளர்கள் தங்கள் உணர்வுகளை பகிந்துகொண்ட போது அந்த நிகழ்வுக்கு தன்னுடைய பங்களிப்பையும் கொடுக்க வந்திருந்தார் தோழியர் "மருத்துவர்  செல்வி" அவர்கள்.

நிகழ்ச்சி முடியும் போது தமிழகத்தில் எங்கோ ஒரு பகுதியில் இருந்து
தாய் தந்தையரால் விரட்டியடிக்கப்பட்ட ஒரு மாற்றுத்திரனாளி திருநங்கை அந்த நிகழ்வுக்கு வந்திருந்து உதவி கோறினார்
என்னால் நடக்க முடியவில்லை, உடல்நிலையும் சரியில்லை என்று எங்கள் அனைவரையும் கலங்கவைத்துவிட்டார்.

கூட்டம் குடிந்து அனைவரும் சென்ற பிறகு
சில புரட்சிகர இயக்க தோழர்கள் எங்கள் தோழர்களோடு இவர் இருக்கடும் நீங்கள் இவரை இங்கிருந்து{எழும்பூர் இக்சாவில்} விருகம்பாக்கம் கொண்டுவந்து சேர்த்துவிடுங்கள் என்று சொல்லி அவருக்கு ஆட்டோ செலவுக்கு பணமும் கொடுத்துவிட்டு சென்றார்.

சிறிது நேரத்தில்
அந்த சகோதரி சிறுநீர் கழிக்க செல்லவேண்டும் என்றார்
அந்த அரங்கில் மாற்றுத்திரனாளிகளுக்கென்று கழிவரை இல்லை
அசுத்தம் நிறைந்த ஈரமான தரையில் கையை வைத்து தவழ்ந்துதான்
செல்லவேண்டும் கைக்கு பாலிதீல் பையை கொடுத்து இப்போதைக்கு சமாளித்துகொள் என்று தோழியர் செல்வி அவரை சிறுநீர்கழிக்க அழைத்துச்சென்றார் "நம் அம்மா நமக்கு துனைக்கு இருப்பது போல அப்போது நடந்துகொண்டார்" அந்த சகோதரி

அவர் வந்ததும் அவரை தூக்கி ஆட்டோவில் வைத்துக்கொண்டு
செல்வியும் புரட்சிகர அமைப்பின் பெண் தோழரும்{பெயர் தெரியவில்லை} நான் மற்றும் தோழர் தளபதி பாண்டியனும் உடன் சென்றோம்.

விருகம்பாக்கம் சென்றதும் குறிக்கிய பாதையில்
அந்த தோழர்களின் விடுதிக்கு செல்லவேண்டும்  தோழியரால்  
நடக்க முடியாது எனவே அவரை நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து தூக்கிக்கொண்டு உள்ளே சென்றோம். சென்றதும் அந்த வீட்டில் பல திருநங்கைகள் இருப்பதை கண்டோம் அவர்களை பார்த்தது அந்த தோழியருக்கு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். உடன் இருக்கும் தோழியர்களிடம் அவரை பற்றி சொல்லிவிட்டு நாங்கள் வெளியே வந்தோம் அப்போது மணி சரியாக 2 மணி இருக்கும்.

நானும் தளபதி பாண்டியனும் புறப்பட தயாராக ஆனோம்
தோழியர் செல்வி முகத்தில் ஒரு சோர்வு தெரிந்தது என்ன தோழர் என்று கேட்டோம் எனக்கு யாரும்வீடு தர மறுக்கிறார்கள் நான் இன்றுதான் ஒரு வீட்டுக்கு சென்றேன் இன்னும் முன்பணம் கூட கொடுக்கவில்லை இப்போது நேரம் ஆகிவிட்டது. இப்போது போய் வீட்டு ஓனரின் கதவை தட்டினால் என்னை உள்ளே விடமாட்டார் என்று அழாத குறையாக சொன்னார் நானும் தளபதி பாண்டியனும் அதை கேட்டு உடைந்து போனோம்.

அடுத்த நொடியே தன்னை சரி செய்துகொண்டு நடப்பது நடக்கட்டும் என்று வருகிறேன் என்று அடுத்த இலக்கை  நோக்கி நகர்ந்தார் தோழியர் "மருத்துவர் செல்வி"

அன்றைக்கு வலிகை பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி பயனித்ததால்தான் இன்று சிகரத்தை தொட்டுள்ளார்.

இவரை போலதான் மற்ற மூன்று பேரும் இந்த இலக்கை அடைந்துள்ளார்கள் அவர்களை போற்றுவோம் வாழ்த்துவோம்.

நன்றி "தமிழ் இந்து நாளிதழ்"
http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article7443543.ece#comments

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக