தாழ்த்தப்பட்டவர் முதல்வர் ஆக முடியுமா!!
பறை பல்லு பட்டம் போகாமல் உன் சூத்திர பட்டம்
போகாது என்று தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தன் மூத்திர சட்டியோடு சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தவர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள்
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி
படித்து பட்டம் பெற்று தனக்கென வாழாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் தந்தை பெரியாரும் கடைசி வரை பாடுபட்டது இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே அதை யாராலும் மறுக்க முடியாது.
அண்டி பிழைக்க வந்த கூட்டம் மதம் என்னும் அபினை மக்களுக்கு கொடுத்து கடவுள் என்னும் பொம்மையை விளையாட கொடுத்து
அடிமைகளை அடையாளம் காண அவர்களுக்கு மத குறியீடிட்டு
தோலுக்கு ஒரு வர்ணத்தை சொல்லி ஊருக்கு ஒரு ஜாதி அடையாளம் கொடுத்து மொத்தமாக நாம் இந்துகள் என்று சொன்னான்
பறை பல்லு பட்டம் போகாமல் உன் சூத்திர பட்டம்
போகாது என்று தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தன் மூத்திர சட்டியோடு சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தவர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள்
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி
படித்து பட்டம் பெற்று தனக்கென வாழாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் தந்தை பெரியாரும் கடைசி வரை பாடுபட்டது இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே அதை யாராலும் மறுக்க முடியாது.
அண்டி பிழைக்க வந்த கூட்டம் மதம் என்னும் அபினை மக்களுக்கு கொடுத்து கடவுள் என்னும் பொம்மையை விளையாட கொடுத்து
அடிமைகளை அடையாளம் காண அவர்களுக்கு மத குறியீடிட்டு
தோலுக்கு ஒரு வர்ணத்தை சொல்லி ஊருக்கு ஒரு ஜாதி அடையாளம் கொடுத்து மொத்தமாக நாம் இந்துகள் என்று சொன்னான்
பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று நினைத்தாலும்
ஒவ்வொரு வர்ணத்திற்க்கு ஏற்றப் பெயர்தான் வைக்க வேண்டும் என்கிறது
இந்து மநுதர்மம்.
பெற்ற குழந்தைக்கு ஐந்து வயது ஆனால் பள்ளியில்
சேர்க்க நினைத்தால் குலத்தொழிலை கற்றுக்கொடு என்கிறது இந்து
மத
மநுதர்மம். மீறி படிக்க வைத்தால் நாக்கை அறு காதால் கேட்டால்
“காதில் ஈயத்தை காயிச்சி ஊற்று” என்கிறது இந்து மத மநுதர்மம்
ஆரியப் பார்ப்பானுக்கு பணிவிடை செய்வதே இம் மண்ணின் மைந்தர்களின்
பணி என்கிறது இந்து மத மநுதர்மம்.
இந்த மண்ணில் ஒரு தாழ்த்தப்பட்டவர் ஒரு அதிகார பதவிக்கு
போவதென்றால் அதற்க்காக பெரும் போராட்டத்தையும் உயிர் பலியையும்
கொடுத்தே அந்த அதிகாரத்தை நாம் அடைய முடிகிறது, இன்றைக்கும்
சில இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஒரு சிலர் அடக்க நினைத்தால்
அப்போது ஏற்ப்படும் அச்சம் வண்கொடுமை சட்டம் உள்ளது அது நம்மை
தண்டிக்கும் என்ற பயவுணர்வு உள்ளதாலேயே சில குற்றங்கள் இந்த
சட்டத்தால்
குறைந்திருக்கின்றது.
ஆண்டாண்டு காலமாக கடும் போராட்டத்தை நடத்திதான் பெற்றோம் இந்த
உரிமைகளை தோல் சீலை போராட்டம்,கோயில் நுழைவு போராட்டம்,இந்திய சட்ட எரிப்பு போராட்டம்,சாஸ்திரம்
எரிப்பு போராட்டம், என பல போராட்டங்களை செய்து ரோட்டில் நடமாட ஆரம்பித்தோம்.
கையில் இருந்த செருப்பு காலில் போட்டு நடந்தோம்
கக்கத்தில் இருந்த துண்டை தோலில் போட்டு நடந்தோம்
நுழையவே முடியாத கோயிலில் தன் பிள்ளைகள் பெயரில்
அர்ச்சனை செய்தோம்
நாடக கொட்டைகையில் “பஞ்சமனுக்கு இடமில்லை” என்ற நுழைவு சீட்டு
இருந்த
நாட்டில் நாடக மேடையே திராவிடன் கையில் வந்தது குளிர்சாதன வசதிகளோடு
இன்று நாடகத்தை பார்த்து ரசிக்கின்றோம்.
இப்படி பல நிலைகள் இந்த மண்ணில் தோற்றிவித்து தோற்க்கடிக்கப்பட்டுள்ளது
இந்த மாற்றத்தை கொண்டுவந்து ஒரு மகத்தான திராவிடர் நூற்றாண்டை
கடந்துவிட்டோம் ஆயினும் நாம் நம் நிலையை இன்னும் வேகபடுத்த வேண்டும் எந்த தமிழனை தொட்டால்
தீட்டு பார்த்தால் பாவம் என்று சொன்னார்களோ அவர்களை போராடி போராடி அரசு அதிகாரத்தில்
அமர்த்திவிட்டோம். இனி
ஆட்சி அதிகாரம் ஒன்று இருக்கிறது அதை நாம் கையில் எடுக்க வேண்டும்
1920 முதல் 1936 வரை தாழ்த்தப்பட்டோர் யாரும் எந்தத் தேர்தலிலும்
போட்டியிடவில்லை. எல்லாநிலையிலும் நியமனம் மூலமாகவே உறுப்பினராக்கப்பட்டனர்.
ஏற்க்கனவே “தனி தொகுதி” “தனி ஓட்டுரிமை” என்று புரட்சியாளர்
அம்பேத்கர் முன் வைத்த கோரிக்கையை காந்தியின் “வஞ்சகத்தால் துரோகத்தால்“ அவை நிறைவேறாமல்
போனது ஒரு காந்தியின் உயிரை விட ஏழு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் பெரிது என்று
அப்போது அண்ணல் அம்பேத்கருக்கு தந்தி அனுப்பி அறிவுரை கூறிய
“அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின்” அந்த வார்த்தைகள் அளப்பறியாதது
அதன் நோக்கம் வியத்தகு மாபெரும் போராட்ட வடிவம் இந்த நாட்டின்
மகாத்மா என்று போற்றக்கூடிய ஒரு தலைவரையே வேண்டாம் தாழ்த்தப்பட்ட மக்களின் “உயிரை”
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்று எந்த “தலைவரும்” சிந்திக்காத சிந்தனையை ஈரோட்டு
மூலையில் உதிர்த்துள்ளது அவர் விட்டுச் சென்ற அந்த பணியைதான் நாம் இன்று போராட்ட வடிவில்
எடுத்துச் செல்லவேண்டும்
தமிழகத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் அதிகாரியாக வரவேண்டும் என்றால்
அதற்க்காக இடஒடுகீடும் அரசின் ஆணையும் தேவை. இப்படி வந்தால்
மட்டுமே
ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள் இடைநிலை ஜாதியினரோ ஆதிக்க ஜாதியினரோ
ஆரியப் பார்ப்பனியமோ அவர்களை நேரடியாக இவர்கள்தான் எங்களுக்கு அதிகாரியாக வரவேண்டும்
என்று கேட்பதில்லை இதில் இன்னும் ஒரு படி மேலே போய் ஆரியப் பார்ப்பனியர்கள் 1938ல்
கும்பகோணம் நகராட்சியில் ஒரு தீர்மானம் போட்டார்கள் அதில் எங்கள் அக்ரஹாரத்தில் “மலம்”
அல்ல தாழ்த்தப்பட்டவர்கள் வர கூடாது என்றும் அதற்கு பதிலாக இடைநிலை ஜாதியினர்தான் வரவேண்டும்
என்று
தங்களுடைய ஜாதி தீண்டாமையை அரசு தீர்மானமாக போட்டு தங்கள் ஜாதிவெறியை
உறுதிபடுத்திக்கொண்டார்கள்
நாம் இந்த மக்களிடமா ஒரு தாழ்த்தப்பட்டவரை முதல்வராக்க கோரிக்கை
வைக்க முடியும்…?
மநுதர்ம அதிகாரத்தை கையில் வைத்து நம்மை தீண்டத்தகாதவன் என்று
கொள்கிறானோ அது போல அரசு அதிகாரத்தில் நமக்கென்று உரிமையை பெற்று அந்த ஆதிக்க பார்ப்பனிய
ஜாதிவெறி கூட்டத்தை ஒரு தாழ்த்தப்பட்டவர் ஆளவேண்டும் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?
தமிழகத்தில் “தனி” தொகுதிகள் 46 உள்ளது இதில் தாழ்த்தப்பட்டவர்கள்தான்
சில இடத்தில் மலைவாழ் மக்கள்தான் போட்டியிட முடியும் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இதே மக்கள் முதல்வராக முடியுமா என்றால் முடியாது வெறும் 46 தொகுதிகளை வைத்து அதிகாரத்தை
பிடிக்க முடியாது ஆனால் ஆட்சியில்
“சுய உரிமை” கேட்கலாம்!!! 46 தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட
வேட்ப்பாளர்களில் ஒருவருக்கு ஆட்சி அமைக்க போகிற அய்ந்தாண்டுகளில் முதல் இரண்டு ஆண்டுகள்
தாழ்த்தப்பட்டவர்தான் முதல்வராக இருக்க சட்டம் இயற்றவேண்டும்
அப்படி சட்டம் இயற்றினால் மட்டுமே ஒரு தாழ்த்தப்பட்டவர் முதல்வராக முடியும்.
-செல்வேந்திரன் கு-
24/06/2015.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக