இந்து மதத்தில் சில ஏன் எதற்காக...?
இப்படி ஒரு புத்தகத்தை "ஆர்.பி.வி.மணியன்" என்பவர் எழுதி விஜயபாரதம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது
நெற்றிக்கு இட்டுக் கொள்வது ஏன் என்ற தலைப்பில்
இந்துக்கள் ஏன் நெற்றியில் மதக் குறியீடான அடையாளங்களை வைத்துள்ளார்கள் என்று சொல்கிறார்
சொல்கிறவர் அந்த குறியீட்டு பின்னனி கதைகளை
சொல்லியிருப்பார் என்று ஆவளோடு பக்கத்தை புரட்டி போட்டேன்
வழக்கம் போல காவிகள் எப்படி திசை திருப்புவார்களோ அப்படியே
நேராக இவர் வெள்ளையர்களை வைத்தே தொடங்குகிறார்.
நெற்றிக்கு இட்டுக் கொள்வது ஏன்...?
பக்கம் 11
"""""""""""சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நெற்றிக்கு இட்டுக் கொள்வது
சிலருக்கு அநாகரீகமாகப் பட்டது.
ஆங்கிலேயர்கள் நம்மவர்கள் திருநீறு, திருமண் இட்டுக் கொள்வதை
{Caste Mark ஜாதி அடையாளம்} என்று கெட்டப் பெயர் தந்து தூக்கில் போடப் பார்த்தார்கள்.
வாஸ்தவத்திலோ விபூதி பூசுகிறவர்களில் ப்ராணரிலிந்து So Called தீண்டாதார் வரை சகல ஜாதியாரும் உள்ளனர். இப்படியே திருமண் இட்டுக் கொள்கிறவர்களிலும் எல்லா ஜாதியாரும் இருக்கிறார்கள்
ஆகவே நாம் நெற்றிக்கு இட்டுக் கொள்வது "Caste Mark" அல்ல; மாறாக "Religious Mark"{சமய சின்னம்} ஆகும்.""""""""""""""
இந்த ஆர்.பி.வி.மணியன் என்பவர்தான் இந்த பக்கதில்
இந்த இட்டுக் கொள்வது ஜாதி அடையாளம் இல்லை அது வெள்ளையன் சூட்டுய பெயர் என்றார் அவரே இதே புத்தகத்தில்
பக்கம் 98ல் வடகலை தென்கலையினர் ஏன் நாமம் போடுகின்றனர் என்று சொல்கிறார் இங்கே இது #ஜாதிஅடையாளம் இல்லை என்கிறார்
அங்கே வடகலை,தென்கலையினர் குறியீட்டை பேசுகின்றார்
இங்கே ''''''வாஸ்தவத்திலோ விபூதி பூசுகிறவர்களில் ப்ராணரிலிந்து So Called தீண்டாதார் வரை சகல ஜாதியாரும் உள்ளனர்''''''' என்று பேசுகிறவர் அங்கே இவர்களுக்கு ஏன் அந்த உரிமை இல்லை என்று சொல்லமறுக்கிறார்.
1918 -19 ல் ஸ்ரீ ரங்கத்திலே ஒரு யானைக்கு வடகலை நாமம் போடுவதா? அல்லது தென்கலை நாமம் போடுவதா என்று
நாமம் போடுவதில் ஒரு கலவரமே நடந்து அது நீதி மன்றம் வரை சென்றது உலகறிந்த செய்தி அந்த செய்தி இவர் படித்திருப்பார இல்லை தெரிந்து அந்த இழிவான காரியத்தை மறைத்திருப்பாரா...?
வடகலையினர் தென்கலையினரை பார்த்தால்
சுவற்றில் முட்டிக்கொள்ளவேண்டும் என்று முட்டிக்கொண்டதெல்லாம் இந்து மத ஜாதி தீண்டாமை என்பதை மணியன் அறிந்தே தவிற்த்து இருக்கிறார்
இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்
விபூதி பூசுவோர்களில் ப்ராணரிலிந்து So Called தீண்டாதார் வரை சகல ஜாதியாரும் உள்ளனர் என்று குறிப்பிடுகின்றார்
தீண்டாமை எங்கே தொடங்குகிறது என்று கவனித்தீர்கள் என்றால் புரியும். தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள் ஜாதி ஒழியாமல் தீண்டாமை எப்படி ஒழியும் என்று சொல்வார் இதற்கு சான்றுதான்
இந்த "So Called தீண்டாதார் "
இதுதான் புனிதமான இந்து மதத்தின் நிலை
மானமுள்ள தமிழன் நெற்றியில் பொட்டு வைப்பானா...?
"புத்தகம் பற்றிய விமர்ச்சனம் தொடரும்"